புத்தம் புதிய திரைப்படங்களின் பகுக்கும் வசதியுடன் கூடிய சரியான தகவல்கள் பொதிக்கப்பட்ட பாடல்கள் (Library Embedded MP3), பாடல் வரிகள், முன்னோட்டங்கள், விமர்சனங்கள், சம்பந்தப்பட்ட உரலிகள் மற்றும் தகவல்களை, பகிர்தல், பகுத்தல், தேடல் மற்றும் தரவிறக்கத்திற்கான வசதிகளோடு உடனுக்குடன் புதுப்பிக்கப்படும் இத்தளத்தில் இலகுவாகப் பெறலாம்.

Monday, January 31, 2011

வந்தே மாதரம்


பாடல்கள் : கவிப்பேரரசு வைரமுத்து மற்றும் பக்கிம் சந்திர சட்டரஜி
இசை : இசைப்புயல் ஆஸ்கர் ஏ.ஆர்.ரகுமான்
ஆண்டு : 1997
தயாரிப்பு : பரத்பாலா புரொடக்சன்ஸ்
ஏ.ஆர்.ரகுமான் : விக்கிபீடியா

எண் பாடல் பாடியவர்கள் தரவிறக்கம்
1 தாய் மண்ணே வணக்கம் ஆஸ்கர் ஏ.ஆர்.ரகுமான்
2 வந்தே மாதரம் - தேசியப்பாடல் ஏ.ஆர்.ரகுமான் குழுவினர்
3 வந்தே மாதரம் - ரிவைவல் ஏ.ஆர்.ரகுமான் குழுவினர்
வரிகள்:
காணொலி: தாய் மண்ணே வணக்கம்


காணொலி: வந்தேமாதரம் - தேசியப்பாடல்


பாடல் விமர்சனம்:
சுதந்திரப் பொன்விழாவில் இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனின் இதயத்திற்குள்ளும் நுழைந்து தேசிய உணர்வுகளுக்கு புத்துயிர் பாய்ச்சி மாபெரும் தேசிய விழிப்புணர்வை இந்தியா முழுக்க ஏற்படுத்தியது என்றால் அது 1997ஆம் வெளியான இசைப்புயலின் வந்தேமாதரம் படைப்பு ஏற்படுத்திய அதிர்வலைகள் என்று தான் சொல்ல வேண்டும். ஒரு புறம் துர்கையை வழிபடுவதாக வரும் பக்கிம் சந்திர சட்டர்ஜியின் வந்தே மாதரத்தை தேசியப் பாடலாக ஏற்க முகமதிய அமைப்புகள் மறுத்துவருவதும், இந்து அமைப்புகள் அதற்கு எதிராக போர்கொடி உயர்த்துவதும் நடந்துகொண்டிருக்கிற போது, வந்தேமாதரம் என்று தேசிய அளவில் பிரம்மாண்டமாய் முழங்கிய ஏ.ஆர்.ரகுமானின் இசைப்புயல் அவற்றையெல்லாம் தகர்த்து ஒட்டுமொத்த இந்தியாவிலும், ஜாதி மத பேதங்கள் கடந்த தேசிய உணர்வை தட்டி எழுப்பி பெரும்புரட்சியே செய்தது என்பதை இந்தியர் எவரும் மறுக்கமுடியாது. இத்தனைக்கும் இதைப் படைத்த ஏ.ஆர்.ரகுமான் ஒர் இசுலாமியர்.

தேசிய கீதம்



பாடல்

:

நோபல் விருது வென்ற கவிஞர் மகாகவி இரவீந்திரநாத் தாகூர்
உருவாக்கம் : Timeless Creation
தயாரிப்பு : இந்திய வெளிவிவகாரத் துறை, இந்திய அரசு
நாட்டுப்பண் : விக்கிபீடியா
தாகூர்: விக்கிபீடியா
பாடல்:
வரிகள்:
தகவல்கள்:
நோபல் பரிசு வென்ற வங்காளக் கவிஞர் இரவீந்திரநாத் தாகூரால் வங்காள மொழியிலேயே எழுதப்ட்ட இப்பாடலே இந்தியாவின் தேசிய கீதம். பக்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய வந்தேமாதரம் பாடல் தான் அதற்கு முன் வழக்கில் இருந்து. அப்பாடல் துர்கா தேவியை வணங்குவதாக இருப்பதால் முகமதியர்கள் அதைப் பாட எதிர்ப்பு காட்டவே, இரவீந்திரனாத் தாகூரின் இப்பாடல் நாட்டுப்பண் ஆனது. இப்பாடல் வரிகளுடன் இதற்கான பொருளும் தரப்பட்டுள்ளது. வேண்டியவர்கள் தரவிறக்கம் செய்து காணலாம்.
காணொலி:


உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு மையநோக்கப் பாடல்



பாடல்

:

முத்தமிழறிஞர் முனைவர்.கலைஞர்.மு.கருணாதி அவர்கள்
இசை : இசைப்புயல் ஆஸ்கர் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள்
இயக்கம் : கௌதம் வாசுதேவ் மேனன்
தயாரிப்பு : தமிழக அரசு 2010
வெளியீடு: மே 16, 2010ல் சென்னைப் பல்கலைக் கழக நூற்றாண்டு விழா அரங்கில் முத்தமிழறிஞர், தமிழக முதல்வர் கலைஞர் முனைவர்.மு.கருணாநிதி அவர்கள் குறுவட்டை வெளியிட, அதை வயலின் வித்வான் சுப்பிரமணியன் பெற்றுக்கொண்டார்.
பாடல்:
வரிகள்:
காணொலி:

பாடியவர்கள்:
AR ரஹ்மான், TM சௌந்தர்ராஜன், கார்த்திக், ஹரிணி, சின்மயி, ஹரிஹரன், யுவன் ஷங்கர் ராஜா, விஜய் ஜேசுதாஸ், நரேஷ் ஐயர், P சுசீலா, GV பிரகாஷ்குமார், TL மஹாராஜன், பிளாஸே, சுருதி ஹாசன், TM கிருஷ்ணா, ஸ்ரீநிவாஸ், சின்ன பொண்ணு, அருணா சாய்ராம், பாம்பே ஜெய்ஸ்ரீ, நித்யாஸ்ரீ, சௌம்யா, MY அப்துல் கானி, காஜாமொஹிதின், சபுமொய்தீன், AR ரெஹனா, பென்னி தயால், தேவன் ஏகாம்பரம், ஷ்வேதா மோகன், அனுராதா ஸ்ரீராம், உன்னி மேனன்
பாடல் விமர்சனம்:
உலகத் தமிழ் செம்மொழிக்கான பாடலானாலும் இதில் பன்மொழிக் கலைஞர்களும் பங்கேற்றனர். 70 பாடகர்களைக் கொண்டு உலகத் தரத்தில் இப்பாடலை ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, மெரினா கடற்கரையிலிருந்து கன்னியாகுமரிவரை பல தமிழ்த்தளங்களையும் காட்டியிருந்தார்கள். பாடல் உலக அரங்கை எட்டியதானாலும், மேற்கத்திய இசைக்கருவியான டிரம்ஸ் பயன்படுத்தியது, இடையே பிளேஸ் குழுவின் ராப் உள்ளிட்ட சங்கதிகள் விமர்சனத்திற்குள்ளாக, சில தமிழக அடையாளங்களை இன்னும் காட்டியிருக்கலாம் என்ற கருத்தும் எழுந்தது. ஆனால், கிட்டத்தட்ட 70 பாடகர்களையும் ஒருங்கிணைத்து அதைக் கலைஞரின் தமிழுக்கு இசைவாக இசையமைத்ததாகட்டும், அந்தந்தப் பாடகர்களுக்கே உரிய திறமைக்கேற்ப பயன்படுத்தியிருப்பதாகட்டும், பாடலை உருவாக்கிய, ரகுமானையும், காட்சிப்படுத்திய கௌதம் வாசுதேவ் மேனனையும் பாராட்டாமல் இருக்கவும் முடியாது. அவர்களின் சிரத்தை மதிப்புவாய்ந்ததே.
விழாவில் கலைஞர் உரை:

பாடல், குறுவட்டை வெளியிட்டு முதல்வர் கருணாநிதி பேசியதாவது: தமிழ்ச் செம்மொழி மாநாட்டு பாடலை இயற்றுவது என முடிவு செய்த உடன், அதில் சங்ககாலம் முதல் கம்பன் காலம் வரை தமிழ்மொழியின் சிறப்பையும், தொன்மையையும், அதில் காட்டப்பட்டுள்ள தமிழரின் பண்பாட்டையும், பழக்க வழக்கங்களையும் ஒரு பாடலில் அமைத்துக் கொடுக்க வேண்டும். தமிழ்ச் செம்மொழி தான் என்பதை அனைவரும் ஏற்கும் வகையில் செய்ய வேண்டும்.

இவற்றையெல்லாமல் ஒரே பாடலில் கொண்டு வருவது எவ்வளவு இடர்பாடு நிறைந்தது என்பதை நன்றாக அறிவேன். அந்த பாடல் எழுதும்போது ஏற்பட்ட உணர்ச்சி எனக்கு மாத்திரமே தெரியும். அந்த உணர்ச்சிகளின் வெளிப்பாட்டில் ஏற்பட்ட மகிழ்ச்சியை இந்த பாடலுக்கு உங்களிடம் கிடைத்துள்ள வரவேற்பின் மூலம் அறிய முடிகிறது. எனக்கு முதுகில் அறுவை சிகிச்சை நடந்து, வலியுடன் மருத்துவமனையில் துடித்துக் கொண்டிருந்தபோது ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருது கிடைத்ததை அறிந்து, அவர் இருக்கும் இடத்தை கண்டு பிடித்து, அவரை வாழ்த்தி கடிதம் எழுதி அனுப்பினேன். அவரின் மூலம் தமிழின் சிறப்பு உலகம் முழுவதும் பரவியுள்ளது.

இந்த பாடலின் முதல் வரியான, 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்பதன் பொருள், பிறப்பு என்பது எல்லாருக்கும் பொதுவானது; நாம் அனைவரும் ஒன்றே என்பதை குறிக்கும். அந்த வகையிலேயே உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் 27 நாடுகளைச் சேர்ந்த 205 அறிஞர்கள் பங்கேற்கின்றனர். அவர்கள் எல்லாம் இந்த பாடலின் மூலம் தமிழின் தொன்மையையும், சிறப்பையும் அறிவார்கள். அந்தளவிற்கு சிறப்பாக இந்த பாடலை அனைவரும் விரும்பும் வகையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துக் கொடுத்துள்ளார். அவரை எனக்கு அவ்வளவாக தெரியாது. அவரும் தமிழர், நானும் தமிழர் என்பது தான், எங்களை இணைத்துள்ளது.

இந்த பாடல் செம்மொழி மாநாட்டின் விளம்பர பாடலாக அமையும். இந்தப் பாடல் தான் செம்மொழி மாநாட்டின் துவக்கத்தில் ஒலிக்கப்படும். இந்த பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியின் மூலம் அனைவரையும் செம்மொழி மாநாட்டிற்கு வருக வருக என வரவேற்கிறேன். இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.

விழாவில், துணை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் அன்பழகன், தலைமைச் செயலர் ஸ்ரீபதி, பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தர்ராஜன், பாடகி பி.சுசீலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் உரை:

கலைஞர் இயற்றி பாடலை, ரகுமான் இசையமைத்து அதை நான் இயக்கியது என்பது மிகப்பெரிய சந்தோஷம். டி.எம்.எஸ். முதல் ஸ்ருதி வரை அனைவரையும் ரகுமான் பாட வைத்தார். அதேபோல் நானும் டி.எம்.எஸ். முதல் ஸ்ருதி வரை அனைவரையும் இந்தப் பாடலில் காட்டியிருக்கிறேன். பாடலுக்கு இசையமைத்த ரகுமானை காட்ட வேண்டும் என்று நினைத்தேன். அவரையும் காட்டிவிட்டேன்.

மிகப்பெரிய கனவு. கலைஞரை அவரது அலுவத்தில் இருப்பது போன்று படமாக்க வேண்டும் என்று நினைத்தேன். அவரும் சம்மதித்தார். எங்களுடைய சினிமா வரலாற்றில் ஒன் டேக் ஆர்ட்டிஸ்ட் என்று சொல்லுவார்கள். கலைஞரும் அப்படித்தான். என் விருப்பம் போல் நான் அவரை இயக்கினேன். அவரும் ஒரே டேக்கில் நடித்து முடித்து கிளம்பிவிட்டார்.

இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த கனிமொழி அவர்களுக்கும், தமிழக அரசுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

படங்கள்:
இலச்சினை குறுந்தகடு வெளியீடு
மாநாட்டு அரங்கம் மாநாட்டுப் பந்தல்
வழிநெடுக தமிழ் சுவரோவியங்கள இனியவை நாற்பது