வகை | : | நகைச்சுவை - அதிரடி | |
ஆண்டு | : | 2011 | |
இயக்கம் | : | பாலா | |
இசை | : | யுவன்சங்கர் ராஜா | |
பாடல்கள் | : | நா.முத்துக்குமார் | |
நடிகர்கள் | : | விஷால், ஆர்யா, மதுஷாலினி, ஜனனி ஐயர் | |
ஒளிப்பதிவு | : | ஆர்தர் ஏ.வில்சன் | |
வசனம் | : | எஸ்.ராமகிருஷ்ணண் | |
ஒளி, ஒலிக் கோர்ப்பு | : | சுரேஷ் அர்ஸ் | |
கதை, திரைக்கதை | : | பாலா | |
தயாரிப்பு | : | கல்பாத்தி அகோரம் | |
ஒருவரிக் கதை | : | இறைச்சிக்காக கேரளாவிற்குக் கடத்தப்படும் மாடுகளைக் காட்டிக்கொடுக்கும் ஜமீனின் முடிவால் பிறக்கும் அகோரமான விளைவு |
தகவல்கள்: |
படப்படிப்பு துவங்கிய நாள் முதலே மக்களிடம் அதிகமாகப் பேசப்பட்டது. விஷாலின் தனித்துவமான நடிப்பு, ஆர்யாவின் காமெடி, எஸ்.ராமகிருஷ்ணண் வசனம், முதன் முறையாக நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கும் பாலா, முதன்முறையாக சீக்கிரமே படப்பிடிப்பு செய்யப்பட்டு வெளிவரும் பாலா படம் இப்படி எத்தனையோ சங்கதிகளால் மக்களிடம் படம் வெளிவருதற்கு முன்னமே அபிமானம் பெற்றுவிட்ட படம். படத்தைப் பற்றி பலரும் பலவாறு பேசுகிறார்கள். முதல் பாதியில் கதையின்றி படம் நகர்வதும், இரண்டாம் பாதியில் திடீரென்று உருவெடுக்கும் வில்லனும் வலைப்பூ விமர்சகர்களிடம் சாதக, பாதக விமர்சனங்களை விவாதமாகவே எடுத்துவைத்தன. கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம் என்பது மட்டும் உறுதியாகப்பட்டது. |
முன்னோட்டம்: |