வகை | : | ஆக்ஷ்ன் | |
ஆண்டு | : | 2011 | |
இயக்கம் | : | கே.வி.ஆனந்த் | |
இசை | : | ஹாரிஸ் ஜெயராஜ் | |
பாடல்கள் | : | விவேகா, கார்க்கி, கபிலன், எம்சீ ஜேஸ், ஸ்ரீசரண், பா.விஜய் | |
நடிகர்கள் | : | ஜீவா, கார்த்திகா, பியா, அஜ்மல் | |
ஒளிப்பதிவு | : | ரிச்சர்ட் எம்.நாதன் | |
கலை | : | கிரண் | |
ஒளி, ஒலிக் கோர்ப்பு | : | ஆண்டனி | |
கதை, திரைக்கதை | : | கே.வி.ஆனந்த், சுபா | |
வசனம் | : | சுபா | |
தயாரிப்பாளர்கள் | : | குமார், ஜெயராமன் | |
வெளியீடு | : | ஏ.ஜி.எஸ். என்டர்டெய்ன்மென்ட், ரெட் ஜெயண்ட் முவீஸ் | |
ஒருவரிக் கதை | : | குற்றத்திற்கு சாட்சியாகிவிடும் பத்திரிகை புகைப்படக்காரர் சந்திக்கும் இன்னல்களும், போராட்டங்களும். |
பாடல் விமர்சனம்: |
அழகிய வார்த்தைகளை ராப் சுனாமியில் மூழ்கடிக்கும் இசை அகநக பாடலில் ததும்பி வழிகிறது. ஆல்பத்தின் செம ஸாங் அமளி துமளி. ஜாலி தாளம், உற்சாக வார்த்தைகள் என்று கால்களைத் தானாகவே தாளமிடவைக்கிறது, ஹாரிஸின் மெலடி மேஜிக்கில் இன்னொரு என்ட்ரி என்னமோ ஏதோ பாடல். தமிழ் ஃபீலிங்ஸ்களுக்கு இடையில் அதிராமல் சுருதி கூட்டும் ஆங்கில ராப் கூட வசீகரம் தான். மென் வார்த்தைகளைக்கொண்டு காதுகளை உறுத்தாமல் கடக்கிறது வெண்பனியே முன் பனியே பாடல். -ஆனந்த விகடன்(15.12.2010) |
தகவல்கள்: |
முதலில் சிம்பு நடிப்பதாக இருந்து பிறகு ஜீவா கைக்கு மாறிய கதை. ஜூவாவின் கதாபாத்திரம் பத்திரகை புகைப்படக்காரர். அஜ்மலுக்குத் திருப்புமுனை கதாபாத்திரம். ஜூவாவின் நாயகியாக கார்த்திகா - பழைய நடிகை ராதாவின் மகள். இவர் நடித்த மலையாள படமான மகரம் மஞ்சுவைப் பார்த்துவிட்டு ஹாலிவுட் இயக்குனர் டேனி பாயல் தேடி வந்து பாராட்டினார் என்பது கூடுதல் தகுதி. அஜ்மலுக்கு ஜோடி பியா. முதன் முறையாக கேனான் 70 ரக கேமராவில் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். படப்பிடிப்பில் பெரும்பகுதி சீனா. படத்தின் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் சிறப்புத்தோற்றத்தில் முதன்முறையாக வெள்ளித்திரையில் தோன்றுகிறார் என்பது புதிய தகவல். |
முன்னோட்டம்: |