வகை | : | காதல் | |
ஆண்டு | : | 2011 | |
இயக்குனர் | : | டி சபாபதி | |
இசையமைப்பாளர் | : | யுவன் சங்கர் ராஜா | |
பாடல்கள் | : | சினேகன் | |
நடிகர்கள் | : | மிர்ச்சி சிவா, மது ஷாலினி | |
ஒளிப்பதிவு | : | அருள்தாஸ் | |
வசனம் | : | ஆர்.கே.மகாலிங்கம் | |
தயாரிப்பு | : | பேஷன் மூவி மேக்கர்ஸ் | |
ஒரு வரிக்கதை | : | காதலைப் பிரிக்கக் கொடுக்கப்படும் பதினாறு என்கிற நாவலின் விளைவு |
பாடல் விமர்சனம்: |
சின்ன அதிர்வு கூட இல்லாமல் வெளியாகி இருக்கும் யுவன் சங்கர் ராஜாவின் மியூசிக்கல். திரையின் காதலன் காதலி இடையே காதல் மொட்டு விடுவதும், ஸ்பீக்கர் நிறைக்கும் யுவன் ஸ்பெஷல் காதல் மெட்டில் ஒலிக்கிறது அடடா என் மீது தேவதை வாசனை பாடல். பழகியது என்றாலும் இனியது. யார் சொல்லிக் காதல் வருவது பாடலில் ஒலிக்கும் யுவனின் குரலில் மெஸ்மரிஸ மென்மை. பூமி முழுக்க காதல் இருக்க எங்கு ஒடி ஒளிகிறாய் என்ற சினேகனின் வரிகளில் வழிகிறது நேசம். காதல் துடிப்புகளை நம் மீது ஏற்றிவிடும் ஆல்பத்தின் ஹைலைட் பாடல். மெல்லலைப் படகுப் பயணம் போலத் தாலாட்டுகிறது - காட்டுச் செடிக்குக் காவல் கிடைச்சாச்சே பாடலின் இசை காதல் பிரியர்கள் காதலிக்கும் ஆல்பம். -ஆனந்த விகடன் (05.01.2011) |