வகை | : | கிராமத்து எதார்த்தம் | |
ஆண்டு | : | 2011 | |
இயக்கம் | : | சுசீந்திரன் | |
இசை | : | இசைஞானி மேஸ்ட்ரோ இளையராஜா | |
பாடல்கள் | : | ஜெ.ஃபிரான்ஸிஸ் கிருபா, சினேகன், யுகபாரதி | |
நடிகர்கள் | : | அப்புக்குட்டி, சரண்யா மோகன், ராமகிருஷ்ணண், தேன்மொழி | |
ஒளிப்பதிவு | : | தேனீ ஈஸ்வர் | |
வசனம் | : | பாஸ்கர் சக்தி | |
படத்தொகுப்பு | : | மு.காசிவிஸ்வநாதன் | |
கதை, திரைக்கதை | : | சுசீந்திரன் | |
தயாரிப்பு | : | மதன் | |
வெளியீடு | : | க்ளௌட் நைன் | |
ஒருவரிக் கதை | : | ஊர்த்திருவிழா சமயத்தில் காணாமல் போன சாமி அழகரின் மரக்குதிரைக்கு பதிலாக வந்து மாட்டிக்கொள்ளும் உயிருள்ள குதிரையை மீட்கப் போராடும் அப்பாவி அழகர்சாமியின் கதை |
தகவல்கள்: | |
முழுக்க, முழுக்க எதார்த்தமான படம். கதாநாயகன் அப்புக்குட்டி என்று படப்பிடிப்பின் போது தெரிந்த்துமே, இப்படம் மக்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்துவிட்டது. எல்லோருக்கும் நல்ல ஒரு படத்தைத் தரப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு மட்டுமே இருந்த்து. அதை படம் நிறைவுசெய்திருக்கிறது. பாஸ்கர் சக்தியின் குறுநாவல் தான் படம் என்றாலும், தமிழ் சினிமாவின் பல மரபுகளை உடைத்தெறிந்து வந்திருக்கிறது அழகர்சாமியின் குதிரை. விமர்சனம் கொடுத்த அத்தனை பதிவர்களும் படத்தை மனதார வெகுவாகப் பாராட்டியிருக்கிறார்கள். அதைப்பார்க்கும் போது படத்தில் அவர்கள் குறிப்பிட்ட ஒரு சில குறைகளை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றே பட்டுவிடுகிறது. இளையராஜா பின்ணணி இசையில் கிராமத்து வாத்தியங்களை மட்டுமே பயன்படுத்தியிருக்கலாம், இன்னும் இசையால் மெருகேற்றியிருக்கலாம், சரண்யா மோகனைத் தவிர்த்து அந்த இடத்திற்கு வேறொரு கிராமத்து முகத்தையே தேர்வு செய்திருக்கலாம், அழகர்சாமிக்கும், சரண்யாமோகன் கதாபாத்திரத்திற்குமான நெருக்கத்தை இன்னும் ஆழமாகச் சொல்லியிருக்கலாம், முடிவில் அழகர்சாமியின் உயிரை குதிரை காப்பாற்றுவதைப் போல அமைந்த்திருப்பதை மாற்றியிருக்கலாம் என்று சின்னச் சின்னதாக பதிவர்கள் இன்னும் ஆசைப்பட்டாலும், முடிவில் மிக மிக திருப்திகரமான படமாக இருப்பதாக அனைவரும் மனதாரப்பாராட்டியிருக்கிறார்கள். எதார்த்த குலையாத சினிமாவாக பதிந்திருப்பதில் படமும் மக்களுக்கு பிடித்துப்போய் இருக்கின்றது என்பதே உண்மை. | |
முன்னோட்டம்: | |