பல தடங்கள்களுக்குப் பிறகு வெளிவந்த நல்லபடம். தெலுங்குப் படத்தின் தமிழ் ரீமேக். தெலுங்கில் லேகா நடித்த வேடத்தில், கெட்டவனிலிருந்து நீக்கியதால் சிம்புவுடன் நடிக்க மறுப்பு, அந்த வேடத்திற்கு சினேகா உள்ளாலை புக் செய்து, சிம்புவுடன் உரசல் ஏற்பட்டதால் அவரும் நடிக்க மறுப்பு, கதை உரிமை சூப்பர் குட் பிலிம்ஸிடமிருந்து வி.டி.வி. புரொடக்சனுக்கு மாற்றம், படப்படிப்பில் சிம்புவுக்கு மூன்று முறை காயம், ஆபரேஷன், கோ படத்தில் நடிக்க சிம்பு மறுத்ததால் ஹிட் குடுத்தாகவேண்டிய கட்டாயம், எவன்டி உன்னப் பெத்தான் என்கிற ஒரு பாடலை மட்டும் பாடல் வெளியீட்டு விழாவில் வெளியிட்டது, அதை சிம்புவே பாடியது, சிம்புவும்-பரத்தும் இணைந்த செய்யும் படம், இப்படி எக்கச்சக்க பரபரப்புகளுக்குப் பிறகு படம் வெளிவந்திருக்கிறது.
பட ரிலீஸூக்கு முன் டிரைலர் கூட காட்டவில்லை. ஆனால், முதல் காட்சிக்கே மிகப்பெரிய வரவேற்பு. கோதாவில் சிம்பு நிராகரித்த கோ படமும் ஒரே சமயத்தில் திரையிடப்பட்டிருக்க கோ நன்றாக இருந்தது என்று பேசப்பட்டாலும், வானத்திற்கு மோசமான விமர்சனங்கள் ஏதுமின்றி, நல்ல வரவேற்பைப் பெற்றது. பாடல்களே பெரிதாக எதிர்பார்க்க வைத்தன. அதையும் தாண்டி, படமும், கதையும், கேமராவும் நன்றாகவே இருந்தது. விமர்சகர்கள் பெரும்பாலும் நல்லபடியாவே விமர்சித்திருந்தார்கள். ஆனந்தவிகடன் 44 மதிப்பெண் தந்திருந்தது. மனிதநேயத்தை இந்த நேரத்தில் உணர்த்த இப்படி ஒரு படம் தேவைதான். |