புத்தம் புதிய திரைப்படங்களின் பகுக்கும் வசதியுடன் கூடிய சரியான தகவல்கள் பொதிக்கப்பட்ட பாடல்கள் (Library Embedded MP3), பாடல் வரிகள், முன்னோட்டங்கள், விமர்சனங்கள், சம்பந்தப்பட்ட உரலிகள் மற்றும் தகவல்களை, பகிர்தல், பகுத்தல், தேடல் மற்றும் தரவிறக்கத்திற்கான வசதிகளோடு உடனுக்குடன் புதுப்பிக்கப்படும் இத்தளத்தில் இலகுவாகப் பெறலாம்.

Saturday, July 2, 2011

வானம்


வகை : நெகிழ்ச்சி-சென்டிமென்ட்
ஆண்டு : 2011
இயக்கம் : க்ரிஷ்
இசை : யுவன்சங்கர் ராஜா
பாடல்கள் : யுவன்சங்கர் ராஜா, நா.முத்துக்குமார், சிலம்பரசன், அபிஷேக், லாரன்ஸ்
நடிகர்கள் : சிம்பு என்ற எஸ்.டி.ஆர், பரத், சந்தானம், அனுஷ்கா ஷெட்டி, பிரகாஷ் ராஜ், சினேகா உள்ளால், வேகா தமோடியா, சோனியா அகர்வால், ஜாஸ்மீன்
ஒளிப்பதிவு : நீரவ் ஷா
வசனம் : க்ரிஷ்
படத்தொகுப்பு : ஆண்டனி
கதை, திரைக்கதை : க்ரிஷ்
தயாரிப்பு : VTV Production
ஒருவரிக் கதை : கேபரேக்கு பணம் திருடும் ஏழை இளைஞன், மனிதநேயமின்றி நடந்துகொள்ளும் மேல்தட்டு இளைஞன், இந்து போலீசால் தீவிராதியாக கைது செய்யப்படும் முகமதியர், சென்னையில் தொழில் துவங்க வரும் விபச்சாரி, சிறுவனின் படி்புக்காக கிட்னியை விற்கத் துணிந்த தாய் - இவர்களின் வாழ்க்கை ஒன்றினையும் புள்ளியில் உணரப்படும் மனிதம்
எண் பாடல் பாடியவர்கள்
1 எவன்டி உன்னப் பெத்தான் எஸ்.டி.ஆர்., யுவன்சங்கர் ராஜா
2 வானம் யுவன்சங்கர் ராஜா
3 கேபிள் ராஜா அபிஷேக், லாரன்ஸ்
4 Who am I? பென்னி தயால்
5 No Money No Money எஸ்.டி.ஆர்., ஆன்ட்ரியா, ஸ்ரீகாந்த் தேவா
பாடல்கள்:
தகவல்கள்:
பல தடங்கள்களுக்குப் பிறகு வெளிவந்த நல்லபடம். தெலுங்குப் படத்தின் தமிழ் ரீமேக். தெலுங்கில் லேகா நடித்த வேடத்தில், கெட்டவனிலிருந்து நீக்கியதால் சிம்புவுடன் நடிக்க மறுப்பு, அந்த வேடத்திற்கு சினேகா உள்ளாலை புக் செய்து, சிம்புவுடன் உரசல் ஏற்பட்டதால் அவரும் நடிக்க மறுப்பு, கதை உரிமை சூப்பர் குட் பிலிம்ஸிடமிருந்து வி.டி.வி. புரொடக்சனுக்கு மாற்றம், படப்படிப்பில் சிம்புவுக்கு மூன்று முறை காயம், ஆபரேஷன், கோ படத்தில் நடிக்க சிம்பு மறுத்ததால் ஹிட் குடுத்தாகவேண்டிய கட்டாயம், எவன்டி உன்னப் பெத்தான் என்கிற ஒரு பாடலை மட்டும் பாடல் வெளியீட்டு விழாவில் வெளியிட்டது, அதை சிம்புவே பாடியது, சிம்புவும்-பரத்தும் இணைந்த செய்யும் படம், இப்படி எக்கச்சக்க பரபரப்புகளுக்குப் பிறகு படம் வெளிவந்திருக்கிறது.

பட ரிலீஸூக்கு முன் டிரைலர் கூட காட்டவில்லை. ஆனால், முதல் காட்சிக்கே மிகப்பெரிய வரவேற்பு. கோதாவில் சிம்பு நிராகரித்த கோ படமும் ஒரே சமயத்தில் திரையிடப்பட்டிருக்க கோ நன்றாக இருந்தது என்று பேசப்பட்டாலும், வானத்திற்கு மோசமான விமர்சனங்கள் ஏதுமின்றி, நல்ல வரவேற்பைப் பெற்றது. பாடல்களே பெரிதாக எதிர்பார்க்க வைத்தன. அதையும் தாண்டி, படமும், கதையும், கேமராவும் நன்றாகவே இருந்தது. விமர்சகர்கள் பெரும்பாலும் நல்லபடியாவே விமர்சித்திருந்தார்கள். ஆனந்தவிகடன் 44 மதிப்பெண் தந்திருந்தது. மனிதநேயத்தை இந்த நேரத்தில் உணர்த்த இப்படி ஒரு படம் தேவைதான்.
முன்னோட்டம்

Monday, June 27, 2011

அழகர்சாமியின் குதிரை

வகை : கிராமத்து எதார்த்தம்
ஆண்டு : 2011
இயக்கம் : சுசீந்திரன்
இசை : இசைஞானி மேஸ்ட்ரோ இளையராஜா
பாடல்கள் : ஜெ.ஃபிரான்ஸிஸ் கிருபா, சினேகன், யுகபாரதி
நடிகர்கள் : அப்புக்குட்டி, சரண்யா மோகன், ராமகிருஷ்ணண், தேன்மொழி
ஒளிப்பதிவு : தேனீ ஈஸ்வர்
வசனம் : பாஸ்கர் சக்தி
படத்தொகுப்பு : மு.காசிவிஸ்வநாதன்
கதை, திரைக்கதை : சுசீந்திரன்
தயாரிப்பு : மதன்
வெளியீடு : க்ளௌட் நைன்
ஒருவரிக் கதை : ஊர்த்திருவிழா சமயத்தில் காணாமல் போன சாமி அழகரின் மரக்குதிரைக்கு பதிலாக வந்து மாட்டிக்கொள்ளும் உயிருள்ள குதிரையை மீட்கப் போராடும் அப்பாவி அழகர்சாமியின் கதை
எண் பாடல் பாடியவர்கள்
1 குதிக்கிற... குதிக்கிற... இளையராஜா
2 அடியே இவளே... தஞ்சை செல்வி, சினேகன், லெனின் பாரதி, ஹேமாம்பிகா, முருகன், ஐயப்பன், மாஸ்டர் ரீகன், செந்தில் தாஸ், அனிதா
3 பூவக் கேளு கார்த்திக், ஸ்ரேயா கோஷல்
பாடல்கள்:
தகவல்கள்:
முழுக்க, முழுக்க எதார்த்தமான படம். கதாநாயகன் அப்புக்குட்டி என்று படப்பிடிப்பின் போது தெரிந்த்துமே, இப்படம் மக்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்துவிட்டது. எல்லோருக்கும் நல்ல ஒரு படத்தைத் தரப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு மட்டுமே இருந்த்து. அதை படம் நிறைவுசெய்திருக்கிறது.
பாஸ்கர் சக்தியின் குறுநாவல் தான் படம் என்றாலும், தமிழ் சினிமாவின் பல மரபுகளை உடைத்தெறிந்து வந்திருக்கிறது அழகர்சாமியின் குதிரை. விமர்சனம் கொடுத்த அத்தனை பதிவர்களும் படத்தை மனதார வெகுவாகப் பாராட்டியிருக்கிறார்கள். அதைப்பார்க்கும் போது படத்தில் அவர்கள் குறிப்பிட்ட ஒரு சில குறைகளை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றே பட்டுவிடுகிறது.

இளையராஜா பின்ணணி இசையில் கிராமத்து வாத்தியங்களை மட்டுமே பயன்படுத்தியிருக்கலாம், இன்னும் இசையால் மெருகேற்றியிருக்கலாம், சரண்யா மோகனைத் தவிர்த்து அந்த இடத்திற்கு வேறொரு கிராமத்து முகத்தையே தேர்வு செய்திருக்கலாம், அழகர்சாமிக்கும், சரண்யாமோகன் கதாபாத்திரத்திற்குமான நெருக்கத்தை இன்னும் ஆழமாகச் சொல்லியிருக்கலாம், முடிவில் அழகர்சாமியின் உயிரை குதிரை காப்பாற்றுவதைப் போல அமைந்த்திருப்பதை மாற்றியிருக்கலாம் என்று சின்னச் சின்னதாக பதிவர்கள் இன்னும் ஆசைப்பட்டாலும், முடிவில் மிக மிக திருப்திகரமான படமாக இருப்பதாக அனைவரும் மனதாரப்பாராட்டியிருக்கிறார்கள். எதார்த்த குலையாத சினிமாவாக பதிந்திருப்பதில் படமும் மக்களுக்கு பிடித்துப்போய் இருக்கின்றது என்பதே உண்மை.
முன்னோட்டம்:

Sunday, June 26, 2011

அவன்-இவன்


வகை : நகைச்சுவை - அதிரடி
ஆண்டு : 2011
இயக்கம் : பாலா
இசை : யுவன்சங்கர் ராஜா
பாடல்கள் : நா.முத்துக்குமார்
நடிகர்கள் : விஷால், ஆர்யா, மதுஷாலினி, ஜனனி ஐயர்
ஒளிப்பதிவு : ஆர்தர் ஏ.வில்சன்
வசனம் : எஸ்.ராமகிருஷ்ணண்
ஒளி, ஒலிக் கோர்ப்பு : சுரேஷ் அர்ஸ்
கதை, திரைக்கதை : பாலா
தயாரிப்பு : கல்பாத்தி அகோரம்
ஒருவரிக் கதை : இறைச்சிக்காக கேரளாவிற்குக் கடத்தப்படும் மாடுகளைக் காட்டிக்கொடுக்கும் ஜமீனின் முடிவால் பிறக்கும் அகோரமான விளைவு
எண் பாடல் பாடியவர்கள்
1 ராசாத்தி ஹரி சரண்
2 டைய்யா டைய்யா டோலு சுச்சித்ரா
3 ஒரு மலையோரம் விஜய் யேசுதாஸ், சிறுமி பிரியங்கா, சிறுமி ஸ்ரீநிஷா, சிறுமி நித்யஸ்ரீ
4 முதல் முறை விஜய் பிரகாஷ்
5 அவனப்பத்தி டி.எல்.மகாராஜன், சத்யன்
பாடல்கள்:
தகவல்கள்:
படப்படிப்பு துவங்கிய நாள் முதலே மக்களிடம் அதிகமாகப் பேசப்பட்டது. விஷாலின் தனித்துவமான நடிப்பு, ஆர்யாவின் காமெடி, எஸ்.ராமகிருஷ்ணண் வசனம், முதன் முறையாக நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கும் பாலா, முதன்முறையாக சீக்கிரமே படப்பிடிப்பு செய்யப்பட்டு வெளிவரும் பாலா படம் இப்படி எத்தனையோ சங்கதிகளால் மக்களிடம் படம் வெளிவருதற்கு முன்னமே அபிமானம் பெற்றுவிட்ட படம்.

படத்தைப் பற்றி பலரும் பலவாறு பேசுகிறார்கள். முதல் பாதியில் கதையின்றி படம் நகர்வதும், இரண்டாம் பாதியில் திடீரென்று உருவெடுக்கும் வில்லனும் வலைப்பூ விமர்சகர்களிடம் சாதக, பாதக விமர்சனங்களை விவாதமாகவே எடுத்துவைத்தன. கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம் என்பது மட்டும் உறுதியாகப்பட்டது.
முன்னோட்டம்:

Saturday, February 5, 2011

கோ



வகை : ஆக்ஷ்ன்
ஆண்டு : 2011
இயக்கம் : கே.வி.ஆனந்த்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடல்கள் : விவேகா, கார்க்கி, கபிலன், எம்சீ ஜேஸ், ஸ்ரீசரண், பா.விஜய்
நடிகர்கள் : ஜீவா, கார்த்திகா, பியா, அஜ்மல்
ஒளிப்பதிவு : ரிச்சர்ட் எம்.நாதன்
கலை : கிரண்
ஒளி, ஒலிக் கோர்ப்பு : ஆண்டனி
கதை, திரைக்கதை : கே.வி.ஆனந்த், சுபா
வசனம் : சுபா
தயாரிப்பாளர்கள் : குமார், ஜெயராமன்
வெளியீடு : ஏ.ஜி.எஸ். என்டர்டெய்ன்மென்ட், ரெட் ஜெயண்ட் முவீஸ்
ஒருவரிக் கதை : குற்றத்திற்கு சாட்சியாகிவிடும் பத்திரிகை புகைப்படக்காரர் சந்திக்கும் இன்னல்களும், போராட்டங்களும்.
எண் பாடல் பாடியவர்கள்
1 என்னமோ ஏதோ ஆலப் ராஜூ, பிரசாந்தினி, ராப் ஸ்ரீசரண், எம்சீ ஜேஸ்
2 கல கல திப்பு,கிரிஷ், ஹரிசரண், சயனோரா ஃபிலிப்
3 வெண்பனியே ஸ்ரீராம் பார்த்தசாரதி, பாம்பே ஜெயஸ்ரீ
4 அக நக விஜய் பிரகாஷ், திப்பு, ரனைனா ரெட்டி, பிரியா சுப்ரமணி, சோலார் சாய்,ராப் எம்சீ ஜேஸ், ஸ்ரிக்
5 நெற்றிப் பொட்டில் நரேஷ் ஐயர்
6 அமளி துமளி ஹரிஹரன், ஸ்வேதா மோகன், சின்மயி
பாடல்கள்:
பாடல் விமர்சனம்:
அழகிய வார்த்தைகளை ராப் சுனாமியில் மூழ்கடிக்கும் இசை அகநக பாடலில் ததும்பி வழிகிறது. ஆல்பத்தின் செம ஸாங் அமளி துமளி. ஜாலி தாளம், உற்சாக வார்த்தைகள் என்று கால்களைத் தானாகவே தாளமிடவைக்கிறது, ஹாரிஸின் மெலடி மேஜிக்கில் இன்னொரு என்ட்ரி என்னமோ ஏதோ பாடல். தமிழ் ஃபீலிங்ஸ்களுக்கு இடையில் அதிராமல் சுருதி கூட்டும் ஆங்கில ராப் கூட வசீகரம் தான். மென் வார்த்தைகளைக்கொண்டு காதுகளை உறுத்தாமல் கடக்கிறது வெண்பனியே முன் பனியே பாடல்.
-ஆனந்த விகடன்(15.12.2010)
தகவல்கள்:
முதலில் சிம்பு நடிப்பதாக இருந்து பிறகு ஜீவா கைக்கு மாறிய கதை. ஜூவாவின் கதாபாத்திரம் பத்திரகை புகைப்படக்காரர். அஜ்மலுக்குத் திருப்புமுனை கதாபாத்திரம். ஜூவாவின் நாயகியாக கார்த்திகா - பழைய நடிகை ராதாவின் மகள். இவர் நடித்த மலையாள படமான மகரம் மஞ்சுவைப் பார்த்துவிட்டு ஹாலிவுட் இயக்குனர் டேனி பாயல் தேடி வந்து பாராட்டினார் என்பது கூடுதல் தகுதி. அஜ்மலுக்கு ஜோடி பியா.

முதன் முறையாக கேனான் 70 ரக கேமராவில் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். படப்பிடிப்பில் பெரும்பகுதி சீனா. படத்தின் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் சிறப்புத்தோற்றத்தில் முதன்முறையாக வெள்ளித்திரையில் தோன்றுகிறார் என்பது புதிய தகவல்.
முன்னோட்டம்:

தூங்கா நகரம்



வகை : சென்டிமென்ட்
ஆண்டு : 2011
இயக்கம் : கௌரவ்
இசை : சுந்தர் சி பாபு
பாடல்கள் : எஸ் ஞயானகரவேல், தாமரை, நாராயண கவி, எஸ்.அண்ணாமலை
நடிகர்கள் : விமல், பரணி, நிஷாந்த், கௌரவ், அஞ்சலி, மதுமிதா, சிங்கம்புலி
தயாரிப்பு : தயாநிதி அழகிரியின் கிளௌட் நைன் முவீஸ்
ஒருவரிக்கதை : பெண்களைப் படமெடுத்து மிரட்டும் கும்பலை அடக்கும் நாயகனை, அவன் நண்பர்களைக் கொண்டே கொலைசெய்ய முயற்சிக்கும் வில்லன்
எண் பாடல் பாடியவர்கள்
1 வைகை சிரிச்சா தூங்கா நகரம் பாலக்காடு ஸ்ரீராம்
2 கூரான பார்வைகள் ஹரிஹரன், சின்மயி
3 கல்யாணம், கல்யாணம் - ரீமிக்ஸ் சந்திரபாபு, கார்த்திக்
4 எட்டு கண்களுக்கும் மது பாலகிருஷ்ணண்
5 நீ சிரிச்சா கொண்டாட்டம் சங்கர் மகாதேவன்
6 Rythm of Thoongaanagaram  
7 Theam of Thoongaanagaram  
பாடல்கள்:
தகவல்கள்:
எந்த நேரத்திலும் மக்கள் நடமாட்டத்தைக் காண முடிகிற இடம் மாமதுரை. எனவே தான் இது தூங்கா நகரம் என்ற பெயர் பெற்றது. தூங்காநகரத்தில் சுற்றித்திரியும் நான்கு இளைஞர்களைப்பற்றின கதை. மு.க.அழகிரி, மு.க.அழகிரியாகவே ஒரு காட்சியில் வருகிறார். சிறப்புத்தோற்றத்தில் வடிவேலு. படம்நெடுக சிங்கம்புலியின் காமெடிகள். அஞ்சலி, மதுமிதா நடித்திருக்கிறார்கள். பாடல்கள் ஏற்கனவே பட்டிதொட்டியெல்லாம் ஹிட். இந்தப்படத்திலும் கஸ்தூரிக்கு ஒரு குத்துப்பாட்டு. வைகையில் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தின் போது களத்தில் நேரடிப்படப்பிடிப்பு நடத்தியதால் பரபரப்பு.

பீத்தோவன், மொஸார்ட் வாழந்த நகரத்தில் உள்ள SONO RECORDS, CZECH REPUBLIC என்ற ஸ்டுடியோவில் இந்தியாவிலிருந்து முதன் முதலாக தூங்கா நகரம் படத்தின் பாடல்கள் மற்றும் படத்தின் பின்னணி இசை சேர்ப்பு நடைபெற்று இருக்கிறது.பல ஹாலிவுட் படங்களுக்கு chief conductor-ராக பணிபுரிந்த yan, தூங்கா நகரம் படத்தின் இசை சேர்ப்பு குறித்து கேட்டதற்கு "தான் பணிபுரிந்த படங்களிலேயே தூங்கா நகரம் திரைப்படத்தின் பின்னணி இசை மிகவும் சிறப்பாக உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

மதுரையில் நடைபெறும் வழுக்கமரத் திருவிழா போட்டியை படமாக்க 50 லட்சம் ரூபாயில் செலவில் கலை இயக்குனர் சந்தானம் செட் அமைத்து கொடுத்து இருக்கிறார். இப்படத்தில் கமலா தியேட்டர் அதிபரும் , நடிகர் திலகம் சிவாஜியின் நெருங்கிய நண்பருமான வி.என்.சிதம்பரம் முதன் முதலாக வில்லனாக அறிமுகமாகிறார்.
முன்னோட்டம்:

Friday, February 4, 2011

எங்கேயும் காதல்



வகை : காதல்
ஆண்டு : 2011
இயக்கம் : பிரபுதேவா
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடல்கள் : வாலி, நா.முத்துக்குமார், தாமரை, கார்க்கி,எம்சி ஜெஸ், காஷ்
நடிகர்கள் : ஜெயம் ரவி, ஹன்ஸிகா மோத்வானி
ஒளிப்பதிவு : நீரவ் ஷா
தயாரிப்பு : ஏ.ஜி.எஸ். என்டர்டெய்ன்மென்ட், கல்பாத்தி அகோரம்
எண் பாடல் பாடியவர்கள் வரிகள்
1 எங்கேயும் காதல் ஆலப் ராஜூ, தேவன், ரணினா ரெட்டிஉண்டு
2 தீ இல்லை நரேஷ் அய்யர், முகேஷ், கோபால் ராவ், மஹதி, ரணினா ரெட்டி உண்டு
3 நங்காய் ரிச்சர்ட், ராகுல் நம்பியார், நவீன் மாதவா இல்லை
4 லோலிதா கார்த்திக், பிரசாந்தினி உண்டு
5 Bathing At Cannes எம்சீ ஜேஸ், கார்த்திக், ரணினா ரெட்டி, காஸ், க்ரிஸ்ஸி இல்லை
6 நெஞ்சில் நெஞ்சில் ஹாரிஸ் ராகவேந்திரா, சின்மயிஉண்டு
7 திமு திமு கார்த்திக்இல்லை
பாடல்கள்:
வரிகள்:
பாடல் விமர்சனம்:
ஒரே ரிதத்தில் ஒலிக்கும் எங்கேயும் காதல் பாடலில் ஆலப் ராஜூவின் குரல் ஐஸ்கிரீம் உருகல். குபீர் உற்சாகம் கொப்பளிக்கும் ரிச்சர்ட்டின் குரல் தான் நங்காய் பாடலின் ஸ்பெஷல். கேட்டுப் பழகிய மெட்டுக்கு வாலியின் வார்த்தைகள் மட்டும் வளம். லோலிட்டா என்ற வார்த்தையில் ஒரு காந்தக் கவர்ச்சி. அதைக் குலைக்காமல், மெல்லிய பீட்களில் ஒலிக்கிறது இசை. 'பெண்கள் என்றால் செடி. . . பற்றிக்கொள்ளும் கொடி. . .' என்று சிம்பிள் எதுகை மோனையின் வரிகளில் ஈர்க்கிறது தாமரையின் வரிகள். ஜல்ஜல் இசை ஒலிக்கும் நெஞ்சில் நெஞ்சில் பாடலில் இதமாகப் பதமாக பொருந்தி ஒலிக்கிறது ஹாரிஸ், சின்மயி குரல்கள். திமு திமு பாடல் பல்லவி, சரணங்களில் வருடுகிறது நா.முத்துக்குமாரின் மென் காதல் வார்த்தைகள். கைபிடித்து மழைப்பாதையில் அழைத்துச் செல்வது போல அந்த வார்த்தைகளுக்கு உயிர் கொடுக்கிறது கார்த்திக்கின் குரல்.
-ஆனந்த விகடன்(15.12.2010)
தகவல்கள்:
இச் - என்று பெயரிடப்பட்டு படமெடுத்து வந்த பிரபுதேவா, படப்பிடிப்பின் பாதியில் படத்தின் பெயரை எங்கேயும் காதல் என்று மாற்றினார். படத்தில் நடன இயக்குனர் ராஜூ சுந்தரமும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் வருகிறார். படப்பிடிப்பு முழுதும் முடிந்துவிட்டு படம் இன்னும் வெளிவராத நிலையில் விஷால் மற்றும் சமீரா ரெட்டியை வைத்து அடுத்த படத்திற்கான படப்பிடிப்பை துவங்கிவிட்டார். அப்படத்திற்கான பெயர் இன்னும் வைக்கப்படவில்லை என்பது சேதி.

வெப்பம்



வகை : அடிதடி
ஆண்டு : 2011
எழுத்து மற்றம் இயக்கம் : அஞ்சனா
இசையமைப்பாளர் : ஜோஸ்வா ஸ்ரீதர்
பாடல்கள் : நா.முத்துகுமார்
நடிகர்கள் : நானி, கார்த்திக்குமார், பிந்துமாதவி, நித்யா மேனன்
ஒளிப்பதிவு : ஓம் பிரகாஷ்
கலை : மாயன்
ஒலி, ஒளி கோர்ப்பு : ஆண்டனி
தயாரிப்பு : கௌதம் வாசுதேவ் மேனனின் ஃபோட்டான் கதாஸ்
ஒரு வரிக் கதை : அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு குறுக்கு வழியைத் தேர்ந்தெடுத்து தவிக்கும் இரண்டு இளைஞர்கள்
எண் பாடல் பாடியவர்கள்
1 ஒரு தேவதை கிளிண்டன், ஸ்வேதா
2 மழை வரும் சுசான்னா
3 மின்னலை பென்னி
4 காற்றில் ஈரம் கார்த்திக் ஸ்ரீசரண்
5 ராணி நான் அபூர்வா
6 மழை வரும் நரேஷ்
6 வெப்பம் ஜோஷ், நரேஷ்
பாடல்கள்:
முன்னோட்டம்:

பதினாறு



வகை : காதல்
ஆண்டு : 2011
இயக்குனர் : டி சபாபதி
இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா
பாடல்கள் : சினேகன்
நடிகர்கள் : மிர்ச்சி சிவா, மது ஷாலினி
ஒளிப்பதிவு : அருள்தாஸ்
வசனம் : ஆர்.கே.மகாலிங்கம்
தயாரிப்பு : பேஷன் மூவி மேக்கர்ஸ்
ஒரு வரிக்கதை : காதலைப் பிரிக்கக் கொடுக்கப்படும் பதினாறு என்கிற நாவலின் விளைவு
எண் பாடல் பாடியவர்கள்
1 அடடா என் மீது ஹரிஹரன், பெல்லா சிண்டே
2 காட்டுச் செடிக்கு கார்த்திக் ராஜா
3 தீம் மியூசிக் யுவன் சங்கர் ராஜா
4 வானம் நமதே சங்கர் மகாதேவன்
5 யார் சொல்லி காதல் யுவன் சங்கர் ராஜா
பாடல்கள்:
பாடல் விமர்சனம்:
சின்ன அதிர்வு கூட இல்லாமல் வெளியாகி இருக்கும் யுவன் சங்கர் ராஜாவின் மியூசிக்கல். திரையின் காதலன் காதலி இடையே காதல் மொட்டு விடுவதும், ஸ்பீக்கர் நிறைக்கும் யுவன் ஸ்பெஷல் காதல் மெட்டில் ஒலிக்கிறது அடடா என் மீது தேவதை வாசனை பாடல். பழகியது என்றாலும் இனியது. யார் சொல்லிக் காதல் வருவது பாடலில் ஒலிக்கும் யுவனின் குரலில் மெஸ்மரிஸ மென்மை. பூமி முழுக்க காதல் இருக்க எங்கு ஒடி ஒளிகிறாய் என்ற சினேகனின் வரிகளில் வழிகிறது நேசம். காதல் துடிப்புகளை நம் மீது ஏற்றிவிடும் ஆல்பத்தின் ஹைலைட் பாடல். மெல்லலைப் படகுப் பயணம் போலத் தாலாட்டுகிறது - காட்டுச் செடிக்குக் காவல் கிடைச்சாச்சே பாடலின் இசை காதல் பிரியர்கள் காதலிக்கும் ஆல்பம்.

-ஆனந்த விகடன் (05.01.2011)

One Love - காதல் ஒன்றல்லாவா. . .




பாடல் : ஏ.ஆர்.ரகுமான், ரக்யூப் ஆலம்
இசை : ஆஸ்கர் ஏ.ஆர்.ரகுமான்
பாடியவர் : ஏ.ஆர்.ரகுமான், ரக்யூப் ஆலம்
இயக்கம் : ஒவய்ஸ் உசேன் - அல்ட்ரா வையலட் ஃபிலிம்ஸ்
புகைப்பட இயக்குனர் : சந்தோஷ் சிவன்
ஒளி-ஒலிக் கோர்ப்பு : ஸ்ரீகர் பிரசாத்
தயாரிப்பு : IMCL (A Baskar Group Initiative)
இணை தயாரிப்பு : சேத்தன் மோட்டிவாலா
பாடல் பதிவு : Panchathan Record Inn, A.M. Studios
தயாரிப்பு : ஏ.ஆர்.ரகுமான்
ஆண்டு : 2007
பாடல் பதிவு : Panchathan Record Inn, A.M. Studios
பாடல் :
வரிகள் :
காணொலி:


தகவல்கள்
One Love - Taj Anthem என்பது இத்தனிப்பாடலின் பெயர். 2007-ஆம் ஆண்டில் உலக அளவில் செவன் ஒன்டர்ஸ் சார்பில் நடைபெற்ற உலக அளவிலான வாக்கெடுப்பில் தாஜ் மகால் முதல் இருபத்தோரிடங்களுள் ஒன்றாக வந்தது. அதற்கான இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு நடந்துகொண்டிருக்கையில் தாஜ் மகாலின் உன்னதத்தையும், காதலின் மகத்துவத்தையும் மீண்டும் ஒரு முறை உணர்த்துவதற்காக உருவான படைப்பு தான் - காதல் ஒன்றல்லவா . . . - படைப்பின் மூலகாரணம். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காளி உள்ளிட்ட ஆறு இந்திய மொழிகளில் வெளியான ஏ.ஆர்.ரகுமானின் ஆல்பம் இது. ஆறு மொழிகளிலுமே ஏ.ஆர்.ரகுமான், கார்த்திக் மற்றும் நரேஷ் ஐயர் மூவரும் பாடியிருந்தார்கள். தாஜ்மகாலிற்காக இந்தியாவை ஒருங்கிணைப்பதே இந்த ஆல்பத்தின் நோக்கமாக இருந்தது. இந்தக்காதல் கீதம் தாஜூக்கு உதவ உங்களை அழைக்கிறது. தாஜூக்கு நீங்கள் தேவை - என்ற வாசகத்தோடு வந்த இந்த ஆல்பம் இந்தியாவில் மட்டுமல்ல, உலக அரங்கில் தாஜ்மகாலுக்கு பெருமை சேர்த்து.

Tuesday, February 1, 2011

PREY FOR ME BROTHER (English)


Music : Oscar A.R.Rahman
Lyrics : A.R.Rahman, Blaaze
Singers : A.R.Rahman & Blaaze
Year : 2007
INSTRUMENTAL VERSION
Saxophone : Carry Hernly
Oboe : Leigh-ann Wootard
Flute : Seetha Shivaswamy
MAKING OF THE VIDEO - DVD
Interview : A.R.Rahman, Blaaze & Bharat Bala
CREDITS
Guitars : Michael McLeary & Christy Samuels
Sarod : Srinivas
Additional Production : Ranjit Barot
Additional Hindi Lyrics : Sukhvinder Singh
Engineered by : Aditya modi, H.Sridhar, S.Sivakumar and Deepak
Final Mix and Mastering by : Michael McLeary
Recorded and Mixed at : Panchathan Record Inn, A.M. Studios and Nirvana Studios
Backing Vocals Arranged by : Clinton Cerejo
Backing Vocals Performed by : Clinton Cerejo, Dominique Cerejo, Vivienne pocha, Hrishikesh kamerkar
Music Co-ordinator : Swamy Durai
Produced by : A.R.Rahman and Michael McLeary
Executive Producer : Mohan Chopra
NOKIA : Karan Grover, Alok Metha, Goutam Advani
Film Conceived and directed by : Barat Bala Productions
Songs :
Song Lyrics :
தகவல்கள்:
சகோதரத்துவம் என்ற வார்த்தையின் மகத்துவம் விவேகானந்தருக்குப் பின் மறுபடியும் ஒரு முறை ஒரு இந்தியனால் உலக அரங்கில் உணர்த்தப்பட்டிருக்கிறது. மறுபடியும் ஏ.ஆர்.ரகுமான் தன் இசைப்புயலால் அன்பாயுதம் பரப்பு அனைவரின் மனத்தையும் அபகரித்திருகிறார். துன்புறும் எல்லா ஜீவன்களுக்காகவும், ஆதரவற்றவர்களுக்காகவும் இறைவனைச் உலக சகோதர,சகோதரிகளைக் கொண்டு பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட படைப்பு. காட்சிகளில் தம்பதிகளுக்கிடையே உள்ள வெறுப்புணர்வு, சுற்றும் முற்றும் பார்க்கிற நிகழ்வுகளால் சிறிதுசிறிதாக மாறி, இறுதியில் இருவரும் அன்போடு இணைவதாகக் காட்டப்படுகிறது. இருவரும் ஒன்றுசேருமிடத்தில் நம்மையே நாம் கேள்விகேட்டுக்கொள்கிற உணர்வை இந்த பாடற்தொகுப்பு ஏற்படுத்திவிட்டது தான் இதன் வெற்றி. இதுவரை தோல்வியாகக் கருதப்பட்ட நீள் வடிவ - அதாவது சினிமாஸ்கோப்பிற்கு எதிரான வடிவில் பல்வேறு இடங்களில் படங்கள் எடுத்து இப்பாடலை வடிவமைத்து வெறும் கருப்பு வெள்ளையை மட்டுமே கையாண்டு, அதில் பிரம்மாண்டமான வெற்றியும் பெற்றிருக்கிறார்கள் என்பது தான் வியத்தகு உண்மை. ஏ.ஆர்.ரகுமானுடன் நோக்கியா நிறுவனமும் இணைந்து இப்பாடற்தொகுப்பை தயாரித்திருப்பது கூடுதல் சிறப்பு.
காணொலி: Prey for me brother
காணொலி: Making of Prey for me brother - Oscar A.R.Rahman's speech
காணொலி: Making of Prey for me brother - Blaaze's speech
காணொலி: Making of Prey for me brother - Barat Bala's speech

கனெக்ஷ்ன்ஸ்




இசை : இசைப்புயல் ஆஸ்கர் ஏ.ஆர்.ரகுமான்
பாடல் : ரக்யூப் ஆலம்
பாடியவர் : ஏ.ஆர்.ரகுமான்
ஆண்டு : 2009
தயாரிப்பு : பரத்பாலா மற்றும் நோக்கியா
பாடல் பதிவு மற்றும் கலவை : அமரர் எச்.ஸ்ரீதர்
டிரம்ஸ் இசை : சிவமணி, டிரம் கஃபே (முஸ்தஃபா குட்டோன், ஃபோ மஸிங்கோ)
இயக்கம் : கனிகா மைய்யெர்
காணொலிக் கோர்ப்பு : கனிகா மைய்யெர்
திரைக்கலை : கிரண்ரெட்டி
ஆடற்கலை : ஃபரோஸ் கான்
உதவி இயக்கம் : கவிதா கார்னியரோ, சச்சி மானியார்
தயாரிப்பு நிர்வாகம் : லினெட் டிசோசா
ஒப்பனை(ஏ.ஆர்.ரகுமான்) : சாச்சா மென்டெஸ், இட்டி அகர்வால், மகேஸ்
பாடல் :
வரிகள் :
தகவல்கள்:
சாதி, மத, வர்க்க பேதங்கள் ஏதுமின்றி மனிதநேயத்தோடு ஆரத்தழுவி அன்பைப் பறிமாறும் சுதந்திரத்தை ஜூவான் மண் என்ற அயல் நாட்டுக்காரரின் ஃப்ரீ ஹக்ஸ் அறக்கட்டளை வலியுறுத்தியது. இதைத் தான் இப்பாடலும் நமக்கு உணர்த்துகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு இந்திய இசைத் துறையில் தடம்பதித்த செல்வாக்குள்ள இசையறிஞரின் பெயர் குறித்து நோக்கியா நிறுவனம் போட்டி வைத்திருந்தது. இதற்கு அதிக பேர் அளித்த வாக்கு நம் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்குத் தான். பிறகு ஏ.ஆர்.ரகுமான் மற்றும் நோக்கியா இணைந்து ப்ரே ஃபார் மீ பிரதெர் என்ற காணொலிப் படத்தை உருவாக்கினார்கள். அது மிகப் பெரிய தாக்கத்தை உலக அளவில் ஏற்படுத்தியது. பிறகு இருவரும் இணைந்து உருவாக்கின அடுத்த காணொலித் திட்டமே இந்த கனெக்ஷ்ன்ஸ் பாடற்தொகுப்பு. ஹிந்தி மொழியில் உருவான இத்தொகுப்பும் உலக அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தத் தவறவில்லை. நோக்கியா நிறுவனத்தின் மக்களை இணைத்தல் என்ற பொருள்படும் கனெக்ட்டிங் பியூப்பிள் என்ற வாசகத்தை மையமாக வைத்தே இதற்கும் கனெக்ஷ்ன்ஸ் என்று பெயரிட்டார்கள். இப்பொழுது வரை நோக்கியா வெளியிடும் எல்லா கைபேசி வகையறாக்களிலும், இந்தப்பாடற்தொகுப்பு இலவசமாக பதிந்தே விற்பனைசெய்யப்படுகிறது.
காணொலி:


Monday, January 31, 2011

வந்தே மாதரம்


பாடல்கள் : கவிப்பேரரசு வைரமுத்து மற்றும் பக்கிம் சந்திர சட்டரஜி
இசை : இசைப்புயல் ஆஸ்கர் ஏ.ஆர்.ரகுமான்
ஆண்டு : 1997
தயாரிப்பு : பரத்பாலா புரொடக்சன்ஸ்
ஏ.ஆர்.ரகுமான் : விக்கிபீடியா

எண் பாடல் பாடியவர்கள் தரவிறக்கம்
1 தாய் மண்ணே வணக்கம் ஆஸ்கர் ஏ.ஆர்.ரகுமான்
2 வந்தே மாதரம் - தேசியப்பாடல் ஏ.ஆர்.ரகுமான் குழுவினர்
3 வந்தே மாதரம் - ரிவைவல் ஏ.ஆர்.ரகுமான் குழுவினர்
வரிகள்:
காணொலி: தாய் மண்ணே வணக்கம்


காணொலி: வந்தேமாதரம் - தேசியப்பாடல்


பாடல் விமர்சனம்:
சுதந்திரப் பொன்விழாவில் இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனின் இதயத்திற்குள்ளும் நுழைந்து தேசிய உணர்வுகளுக்கு புத்துயிர் பாய்ச்சி மாபெரும் தேசிய விழிப்புணர்வை இந்தியா முழுக்க ஏற்படுத்தியது என்றால் அது 1997ஆம் வெளியான இசைப்புயலின் வந்தேமாதரம் படைப்பு ஏற்படுத்திய அதிர்வலைகள் என்று தான் சொல்ல வேண்டும். ஒரு புறம் துர்கையை வழிபடுவதாக வரும் பக்கிம் சந்திர சட்டர்ஜியின் வந்தே மாதரத்தை தேசியப் பாடலாக ஏற்க முகமதிய அமைப்புகள் மறுத்துவருவதும், இந்து அமைப்புகள் அதற்கு எதிராக போர்கொடி உயர்த்துவதும் நடந்துகொண்டிருக்கிற போது, வந்தேமாதரம் என்று தேசிய அளவில் பிரம்மாண்டமாய் முழங்கிய ஏ.ஆர்.ரகுமானின் இசைப்புயல் அவற்றையெல்லாம் தகர்த்து ஒட்டுமொத்த இந்தியாவிலும், ஜாதி மத பேதங்கள் கடந்த தேசிய உணர்வை தட்டி எழுப்பி பெரும்புரட்சியே செய்தது என்பதை இந்தியர் எவரும் மறுக்கமுடியாது. இத்தனைக்கும் இதைப் படைத்த ஏ.ஆர்.ரகுமான் ஒர் இசுலாமியர்.

தேசிய கீதம்



பாடல்

:

நோபல் விருது வென்ற கவிஞர் மகாகவி இரவீந்திரநாத் தாகூர்
உருவாக்கம் : Timeless Creation
தயாரிப்பு : இந்திய வெளிவிவகாரத் துறை, இந்திய அரசு
நாட்டுப்பண் : விக்கிபீடியா
தாகூர்: விக்கிபீடியா
பாடல்:
வரிகள்:
தகவல்கள்:
நோபல் பரிசு வென்ற வங்காளக் கவிஞர் இரவீந்திரநாத் தாகூரால் வங்காள மொழியிலேயே எழுதப்ட்ட இப்பாடலே இந்தியாவின் தேசிய கீதம். பக்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய வந்தேமாதரம் பாடல் தான் அதற்கு முன் வழக்கில் இருந்து. அப்பாடல் துர்கா தேவியை வணங்குவதாக இருப்பதால் முகமதியர்கள் அதைப் பாட எதிர்ப்பு காட்டவே, இரவீந்திரனாத் தாகூரின் இப்பாடல் நாட்டுப்பண் ஆனது. இப்பாடல் வரிகளுடன் இதற்கான பொருளும் தரப்பட்டுள்ளது. வேண்டியவர்கள் தரவிறக்கம் செய்து காணலாம்.
காணொலி:


உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு மையநோக்கப் பாடல்



பாடல்

:

முத்தமிழறிஞர் முனைவர்.கலைஞர்.மு.கருணாதி அவர்கள்
இசை : இசைப்புயல் ஆஸ்கர் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள்
இயக்கம் : கௌதம் வாசுதேவ் மேனன்
தயாரிப்பு : தமிழக அரசு 2010
வெளியீடு: மே 16, 2010ல் சென்னைப் பல்கலைக் கழக நூற்றாண்டு விழா அரங்கில் முத்தமிழறிஞர், தமிழக முதல்வர் கலைஞர் முனைவர்.மு.கருணாநிதி அவர்கள் குறுவட்டை வெளியிட, அதை வயலின் வித்வான் சுப்பிரமணியன் பெற்றுக்கொண்டார்.
பாடல்:
வரிகள்:
காணொலி:

பாடியவர்கள்:
AR ரஹ்மான், TM சௌந்தர்ராஜன், கார்த்திக், ஹரிணி, சின்மயி, ஹரிஹரன், யுவன் ஷங்கர் ராஜா, விஜய் ஜேசுதாஸ், நரேஷ் ஐயர், P சுசீலா, GV பிரகாஷ்குமார், TL மஹாராஜன், பிளாஸே, சுருதி ஹாசன், TM கிருஷ்ணா, ஸ்ரீநிவாஸ், சின்ன பொண்ணு, அருணா சாய்ராம், பாம்பே ஜெய்ஸ்ரீ, நித்யாஸ்ரீ, சௌம்யா, MY அப்துல் கானி, காஜாமொஹிதின், சபுமொய்தீன், AR ரெஹனா, பென்னி தயால், தேவன் ஏகாம்பரம், ஷ்வேதா மோகன், அனுராதா ஸ்ரீராம், உன்னி மேனன்
பாடல் விமர்சனம்:
உலகத் தமிழ் செம்மொழிக்கான பாடலானாலும் இதில் பன்மொழிக் கலைஞர்களும் பங்கேற்றனர். 70 பாடகர்களைக் கொண்டு உலகத் தரத்தில் இப்பாடலை ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, மெரினா கடற்கரையிலிருந்து கன்னியாகுமரிவரை பல தமிழ்த்தளங்களையும் காட்டியிருந்தார்கள். பாடல் உலக அரங்கை எட்டியதானாலும், மேற்கத்திய இசைக்கருவியான டிரம்ஸ் பயன்படுத்தியது, இடையே பிளேஸ் குழுவின் ராப் உள்ளிட்ட சங்கதிகள் விமர்சனத்திற்குள்ளாக, சில தமிழக அடையாளங்களை இன்னும் காட்டியிருக்கலாம் என்ற கருத்தும் எழுந்தது. ஆனால், கிட்டத்தட்ட 70 பாடகர்களையும் ஒருங்கிணைத்து அதைக் கலைஞரின் தமிழுக்கு இசைவாக இசையமைத்ததாகட்டும், அந்தந்தப் பாடகர்களுக்கே உரிய திறமைக்கேற்ப பயன்படுத்தியிருப்பதாகட்டும், பாடலை உருவாக்கிய, ரகுமானையும், காட்சிப்படுத்திய கௌதம் வாசுதேவ் மேனனையும் பாராட்டாமல் இருக்கவும் முடியாது. அவர்களின் சிரத்தை மதிப்புவாய்ந்ததே.
விழாவில் கலைஞர் உரை:

பாடல், குறுவட்டை வெளியிட்டு முதல்வர் கருணாநிதி பேசியதாவது: தமிழ்ச் செம்மொழி மாநாட்டு பாடலை இயற்றுவது என முடிவு செய்த உடன், அதில் சங்ககாலம் முதல் கம்பன் காலம் வரை தமிழ்மொழியின் சிறப்பையும், தொன்மையையும், அதில் காட்டப்பட்டுள்ள தமிழரின் பண்பாட்டையும், பழக்க வழக்கங்களையும் ஒரு பாடலில் அமைத்துக் கொடுக்க வேண்டும். தமிழ்ச் செம்மொழி தான் என்பதை அனைவரும் ஏற்கும் வகையில் செய்ய வேண்டும்.

இவற்றையெல்லாமல் ஒரே பாடலில் கொண்டு வருவது எவ்வளவு இடர்பாடு நிறைந்தது என்பதை நன்றாக அறிவேன். அந்த பாடல் எழுதும்போது ஏற்பட்ட உணர்ச்சி எனக்கு மாத்திரமே தெரியும். அந்த உணர்ச்சிகளின் வெளிப்பாட்டில் ஏற்பட்ட மகிழ்ச்சியை இந்த பாடலுக்கு உங்களிடம் கிடைத்துள்ள வரவேற்பின் மூலம் அறிய முடிகிறது. எனக்கு முதுகில் அறுவை சிகிச்சை நடந்து, வலியுடன் மருத்துவமனையில் துடித்துக் கொண்டிருந்தபோது ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருது கிடைத்ததை அறிந்து, அவர் இருக்கும் இடத்தை கண்டு பிடித்து, அவரை வாழ்த்தி கடிதம் எழுதி அனுப்பினேன். அவரின் மூலம் தமிழின் சிறப்பு உலகம் முழுவதும் பரவியுள்ளது.

இந்த பாடலின் முதல் வரியான, 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்பதன் பொருள், பிறப்பு என்பது எல்லாருக்கும் பொதுவானது; நாம் அனைவரும் ஒன்றே என்பதை குறிக்கும். அந்த வகையிலேயே உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் 27 நாடுகளைச் சேர்ந்த 205 அறிஞர்கள் பங்கேற்கின்றனர். அவர்கள் எல்லாம் இந்த பாடலின் மூலம் தமிழின் தொன்மையையும், சிறப்பையும் அறிவார்கள். அந்தளவிற்கு சிறப்பாக இந்த பாடலை அனைவரும் விரும்பும் வகையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துக் கொடுத்துள்ளார். அவரை எனக்கு அவ்வளவாக தெரியாது. அவரும் தமிழர், நானும் தமிழர் என்பது தான், எங்களை இணைத்துள்ளது.

இந்த பாடல் செம்மொழி மாநாட்டின் விளம்பர பாடலாக அமையும். இந்தப் பாடல் தான் செம்மொழி மாநாட்டின் துவக்கத்தில் ஒலிக்கப்படும். இந்த பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியின் மூலம் அனைவரையும் செம்மொழி மாநாட்டிற்கு வருக வருக என வரவேற்கிறேன். இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.

விழாவில், துணை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் அன்பழகன், தலைமைச் செயலர் ஸ்ரீபதி, பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தர்ராஜன், பாடகி பி.சுசீலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் உரை:

கலைஞர் இயற்றி பாடலை, ரகுமான் இசையமைத்து அதை நான் இயக்கியது என்பது மிகப்பெரிய சந்தோஷம். டி.எம்.எஸ். முதல் ஸ்ருதி வரை அனைவரையும் ரகுமான் பாட வைத்தார். அதேபோல் நானும் டி.எம்.எஸ். முதல் ஸ்ருதி வரை அனைவரையும் இந்தப் பாடலில் காட்டியிருக்கிறேன். பாடலுக்கு இசையமைத்த ரகுமானை காட்ட வேண்டும் என்று நினைத்தேன். அவரையும் காட்டிவிட்டேன்.

மிகப்பெரிய கனவு. கலைஞரை அவரது அலுவத்தில் இருப்பது போன்று படமாக்க வேண்டும் என்று நினைத்தேன். அவரும் சம்மதித்தார். எங்களுடைய சினிமா வரலாற்றில் ஒன் டேக் ஆர்ட்டிஸ்ட் என்று சொல்லுவார்கள். கலைஞரும் அப்படித்தான். என் விருப்பம் போல் நான் அவரை இயக்கினேன். அவரும் ஒரே டேக்கில் நடித்து முடித்து கிளம்பிவிட்டார்.

இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த கனிமொழி அவர்களுக்கும், தமிழக அரசுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

படங்கள்:
இலச்சினை குறுந்தகடு வெளியீடு
மாநாட்டு அரங்கம் மாநாட்டுப் பந்தல்
வழிநெடுக தமிழ் சுவரோவியங்கள இனியவை நாற்பது